Gadgets All Rounder
புதுடெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ள சீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பல் இந்திய ஏவுகணை சோதனையை கண்காணிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5, இலங்கையில் சீனா குத்தகைக்கு எடுத்துள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. அங்கு ஒரு வாரம் இருந்த கப்பல், எரிபொருள் உட்பட தேவையான பொருட்களை நிரப்பிக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. இந்தக் கப்பல் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் வாய்ந்ததால், இந்தக் கப்பலின் வருகைக்காக, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sGIEz06
via IFTTT
No comments